மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக மோடி தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து ஆளும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூன்று சட்டப்பேரவை உறுப்பினர்களும், கவுன்சிலர்கள் சிலரும் பாஜகவில் இணைந்தனர்.
திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தொடரும் சிக்கல்! - பாஜக
கொல்கத்தா: திருணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றொரு சட்டப்பேரவை உறுப்பினர் இன்று பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
TMC
இந்நிலையில் இன்று அலிபுர்துவார் சட்டப்பேரவை உறுப்பினர் வில்சன் சம்ப்ரமரி (Wilson Champramary) பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து வில்சன், "18 கவுன்சிலர்களுடன் நான் இன்று பாஜகவில் இணையவுள்ளேன். இதனைத் தவிர்த்து பல சட்டப்பேரவை உறுப்பினர்களும் பாஜக மேலிடத்துடன் தொடர்பில் இருக்கின்றனர்" என்றார்.