உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோன் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்கு அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த வீர் பால் (20) என்பவர் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று தனது உறவினரின் வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இந்தக் குற்றச் சம்பவத்திற்கு உதவும்விதமாக அவரின் உறவினர் வீட்டின் முன்பு காவலுக்காக நின்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் அவரைத் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது சிறுமி அதே பகுதியில் இருந்த வீர் பாலின் உறவினர் வீட்டில் இருப்பதைக் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.