தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உழவர் சந்தை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு - புதுச்சேரி அரசு உறுதி!

புதுச்சேரி: உழவர் சந்தையில் சிறு வியாபாரிகள் கடை அமைக்க நகராட்சி தடை விதித்ததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதல்வரை சந்தித்து முறையிட்டனர். மாற்று ஏற்பாடு செய்வதாக அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டது.

உழவர் சந்தை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு - புதுச்சேரி அரசு உறுதி!
உழவர் சந்தை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு - புதுச்சேரி அரசு உறுதி!

By

Published : Mar 4, 2020, 5:59 PM IST

புதுச்சேரி விவசாயிகள் தங்கள் பொருட்களை நடுத் தரகரின்றி நேரடியாக விற்பதற்காக, அரசு சார்பில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம், இலாசுப்பேட்டை, அரியாங்குப்பம் பாகூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பகுதிகளில் உழவர் சந்தை கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 வருடமாக இவை செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு நடுவில் தரகர் இல்லாமல் பொதுமக்களுக்கு நேரடியாக குறைந்த விலையில் விற்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் பயன் பெற்று வந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறு வியாபாரிகள் விற்பனை செய்து வருவதாக அரசுக்கு தகவல் வந்ததையடுத்து, நகராட்சித் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

மேலும், அங்கு கடைகள் அமைத்து விற்பதற்கு தடை விதித்தனர். விவசாயம் செய்பவர்கள் மட்டுமே உழவர் சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதனால் கடந்த பாதிக்கப்பட்ட சிறு வியாபாரிகள், இன்று முதலமைச்சர் நாராயணசாமியை சந்திக்க சட்டப்பேரவை வந்தனர். அங்கு அரசு கொறடா அனந்தராமன் தலைமையில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்தனர். அப்போது விவசாயத் துறை அமைச்சர் கமலக்கண்ணன் உடனிருந்தார். பின்னர் சிறு வியாபாரி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்பிறகு யாருக்கும் பாதிப்பில்லாமல் விரைவில் உழவர் சந்தை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருவதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

உழவர் சந்தை சிறு வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு - புதுச்சேரி அரசு உறுதி!

ABOUT THE AUTHOR

...view details