இந்தாண்டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 20 ஆசிரியர்கள் விவரம்:
தொடக்கநிலை, இடைநிலை ஆசிரியர்களில் தலா 2 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, சிறந்த மொழி ஆசிரியர் ஒருவருக்கும், சிறந்த பெண் ஆசிரியர்கள் நான்கு பேர், சிறந்த தொழில் நுட்ப ஆசிரியர் ஒன்று, ஆகியோருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பெயர் அறிவிப்பு கல்வியமைச்சரின் வட்டார விருது புதுச்சேரியில் ஆறு ஆசிரியருக்கும், காரைக்காலில் 2 பேருக்கும், மாகி ஏனாம் பகுதியை சேர்ந்த தலா ஒரு ஆசிரியருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பெயர் அறிவிப்பு முதலமைச்சர் விருது: காரைக்காலில் விழிதியூர் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியை அஞ்சுகம், நெய் வடசேரி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை கலைவாணி, டிஆர் பட்டினம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை சுந்தராம்பாள், மாகி பரதன் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் அஷ்ரப், ஏனாம் ஜாகிர் ஹாசன் அரசு ஆங்கில தொடக்கப் பள்ளி ஆசிரியை மேரி அக்னிச் விமலா தேவி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: புதுச்சேரி சவரி ராயலு நாயக்கர் அரசு பெண்கள் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சிவப்பிரகாசம், காரைக்கால் டிஆர் பட்டினம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை செல்வராணி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இறைநிலை பிரிவில் புதுச்சேரி அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி ஆசிரியர் செல்வராஜ், டிஆர் பட்டினம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பெயர் அறிவிப்பு கல்வி அமைச்சரின் வட்டார விருது: ஐய்யங்குட்டிபலயம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் தரணிதரன், பிஎஸ் பாளையம் பாரதிதாசன் அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் பூலோகநாதன், தொண்டமாநத்தம் அன்சாரி துரைசாமி அரசு மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் பார்த்திபன், காராமணிக்குப்பம் சிறந்த அரசு மேல்நிலைப்பள்ளி விரிவுரையாளர் அன்பழகன் கணுவாப்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் மகாதேவன், சுல்தான்பேட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கிருஷ்ணன்,
வெண்ணிலா நகர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை எழிலரசி, நைனார் மண்டபம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை ராதா, புதுச்சேரி சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியை கோமதி, சஞ்சீவிராயன் பேட்டை அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியை ஹேமமாலினி, ஆலங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தொழில்நுட்ப ஆசிரியர் செந்தில் குமரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு சான்றிதழ் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:தொல்லியல் பட்டயப்படிப்பு தகுதிப்பட்டியல் - செம்மொழியான தமிழ் சேர்ப்பு