கர்நாடக காவல் துறையில் பணிபுரிந்த முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை, இன்று (ஆகஸ்ட் 25) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடிக்கு திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் தகுதிகள் இருப்பதாகத் தெரிவித்தார்.
இறைமாட்சி அதிகாரத்திலிருந்து, 'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு' எனும் குறளைக் குறிப்பிட்டு பேசத் தொடங்கிய அவர், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கும் இருக்கவேண்டிய குணங்கள் குறித்து இக்குறள் பேசுவதாகவும், பிரதமர் மோடிக்கு அஞ்சாமை, ஈகை, அறிவுடைமை, ஊக்கமுடைமை ஆகிய நான்கு பண்புகளும் குறைவில்லாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.