டெல்லியில் கடந்த 24ஆம் தேதி சி.ஏ.ஏ.வுக்கு எதிராகவும் ஆதரவாகவும் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. இரண்டு நாள்களுக்கும் மேலாக நீடித்த வன்முறையில் காவல் துறையினர் உள்ளிட்ட 42 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் மத்திய உளவுத் துறை அலுவலர் அங்கித் சர்மா கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டார்.
நூற்றுக்கும் மேற்பட்ட கத்திக்குத்துகளுடன் அவரது உடல் கழிவுநீர் தொட்டியிலிருந்து மீட்கப்பட்டது. அங்கித் சர்மாவின் கொடூரக் கொலையில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் தாஹீர் ஹுசைனுக்குத் தொடர்புள்ளது எனச் சந்தேகிக்கப்பட்டு, டெல்லி காவல் துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் நேற்று மக்களவையில் டெல்லி வன்முறை குறித்த விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, "டெல்லி வன்முறை திட்டமிட்ட சதியாகும். இதற்குக் காரணமானவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.