இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளாத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீனத் தரப்பிலும் உயிரிழப்பு நேர்ந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளன.
மேஜர் ஜெனரல் அளவிலான பேச்சுவார்த்தை கோபத்தில் முடிந்ததாக தகவல்! - இரு நாட்டு ராணுவ தளபதிகள் நடத்திய பேச்சுவார்த்தை
டெல்லி: இந்திய-சீன எல்லை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை கோபத்தில் முடிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் இரு நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பதற்றத்தைக் குறைப்பது தொடர்பாக இரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினர். இதன்மூலம் விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மோதல் ஏற்பட்ட அதே இடத்தில் இரு நாடுகளின் மேஜர் ஜெனரல் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இச்சந்திப்பு தொடர்பாக நமது ஈடிவி பாரத்துக்குக் கிடைத்த தகவலின்படி, ராணுவத் தளபதிகள் சந்திப்பு கோபத்தில் முடிந்ததாகவும், மோதலில் இருதரப்பிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஏற்றுக்கொள்வதற்குச் சிறிது நாள்கள் பிடிக்கும் என்றும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பல முறை சந்திப்பு நடத்தத் தயார் என்றும் சீனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.