ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை அடுத்த பமர்ரு(Pamarru) பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் அப்பள்ளியின் விடுதியில் தங்கி படித்துவந்த நிலையில், குளியலறையில் நேற்று மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
குளியலறையில் சடலமாகக் கிடந்த மாணவி; போலீசார் தீவிர விசாரணை! - விடுதி
ஹைதரபாத்: தனியார் பள்ளியின் விடுதி குளியலறையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
குளியலறையில் பிணமாக கிடந்த மாணவி
இவர் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவிகள், மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அவரைச் சோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், மாணவியின் மரணம் குறித்து விடுதியின் காப்பாளர், அவரின் நண்பர்களிடம் விசாரித்து வருகின்றனர்.