தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சொந்த தொகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட ஆந்திர அமைச்சர்! - cinarajappa

அமராவதி: ஆந்திர அமைச்சரான சின்னராஜப்பா நேற்று தன் சொந்த தொகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது, ஊருக்குள் நுழையவிடாமல் கிராம மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

Andra Deputy CM Cinarajappa

By

Published : Apr 1, 2019, 12:04 PM IST

ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ளது பெதாபுரம்சட்டமன்றத் தொகுதி. அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அம்மாநில துணை முதலமைச்சருமான சின்னராஜாப்பா நேற்று அங்கு தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், அத்தொகுதிக்குட்பட்ட ஹுசேன் புறம் (Hussein Puram Village) என்ற கிராமத்தில் பரப்புரைக்காக வந்தபோது, அவரைஅந்த ஊர் மக்கள்தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக, அவர் தங்களுக்கு கொடுத்திருந்த வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறிய அவரை பேச விடாமல் தடுத்து நிறுத்தி, திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தினர். இதன் பிறகு, வேறுவழியின்றி அவர் திரும்பிச்சென்றார்.

ABOUT THE AUTHOR

...view details