ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பதேரு (Paderu) பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சிங்கப்பூரிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டிற்கு வருகை தந்துள்ளார். கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களை 14 நாள்கள் கண்காணிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவுப்படி மருத்துவ குழுவினர் தினந்தோறும் அவர் வீட்டிற்கு வந்து அவருக்கு கோவிட்-19 பரிசோதனை செய்துள்ளனர். இதில் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான அந்த இளைஞர், திடீரென்று தனது தொலைபேசியை அணைத்துவிட்டு, வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
அதன்பின், வீட்டிற்குவந்த மருத்துவ குழுவினருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், 'நீங்கள் எங்க வீட்டிற்கு வருவதை உள்ளூர் மக்கள் பார்த்தால் எங்களை தவறாக நினைப்பார்கள், அவர்கள் எங்களை அப்படி பார்த்தால் நாங்கள் தற்கொலை செய்து கொள்வோம்' என்று அவர்களை மிரட்டியுள்ளனர்.
இந்தத் தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த கூடுதல் மருத்துவ அலுவலர் லீலா பிரசாத், "பெற்றோரிடம் இளைஞரை உடனடியாக வீட்டிற்கு வரச் சொல்லுங்கள்" எனக் கூறினார்.