தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் மணல் விற்பனையை நெறிப்படுத்த அவசரச்சட்டம்: ஜெகன்மோகன் ரெட்டி - முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் மணல் பற்றாக்குறையை போக்கவும் நெறிப்படுத்தவும் அவசரச் சட்டம் நிறைவேற்றப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

andhra-to-introduce-new-legislation-to-regulate-sand-mining-transportation

By

Published : Nov 7, 2019, 8:48 AM IST

Updated : Nov 7, 2019, 9:05 AM IST

ஆந்திர மாநிலத்தில் மணல் விற்பனை குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சில நாள்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். பின்னர் இது குறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் ஜெகன்மோகன் பேசுகையில், "மணல் விற்பனையை அதிகரிப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதனை சட்டமாக மாற்ற ஒப்புதல் பெறப்படும். இந்தச் சட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும். அதன்மூலமாக மணல் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்வோர் பற்றி புகாரளிக்க புதிய உதவி எண் அறிவிக்கப்படும். ஆந்திராவில் உள்ள 275 மணல் குவாரிகளில் 83 மட்டுமே செயல்படுகிறது. ஆனால் அந்தக் குவாரிகளின் மூலம் மணல் விற்பனை 41 ஆயிரம் டன்னிலிருந்து 69 ஆயிரம் டன்னாக மணல் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. மணல் விற்பனை குறையாமல் தடுக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது" என்றார்.

இதையும் படிங்க: வருவாய் அலுவலர்கள் சோதனையில் சிக்கிய கடத்தல் மணல்!

Last Updated : Nov 7, 2019, 9:05 AM IST

ABOUT THE AUTHOR

...view details