ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மது விற்பனை இன்று காலை 11 மணி முதல் மீண்டும் தொடங்கியது. ஆந்திராவை பொறுத்தமட்டில் காலை 11 மணிக்கு தொடங்கி மாலை ஏழு மணி வரை மது விற்பனை நடக்கிறது.
மக்கள் அதிகமாக கூட்டம் கூடக் கூடாது. தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநிலத்தின் சிறப்பு தலைமைச் செயலாளர் ரஜத் பார்கவா கூறும்போது, “காலை 11 மணி முதல் இரவு ஏழு மணி வரை மாநிலத்தில் மதுபானக் கடைகள் செயல்படுவது குறித்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
வருவாயைக் கருத்தில் கொண்டு மாநிலத்தில் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்து வருகிறோம். ஆனால் மது அருந்துவதால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது.