தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் 7 யாத்ரிகர்கள் உயிரிழப்பு - சந்திரபாபு நாயுடு வருத்தம் - ஆந்திராவில் மினிபஸ் கவிழ்ந்து விபத்து

ஆந்திரா: கோதாவரி மாவட்டம் அருகே பள்ளத்தாக்கில் மினிப்பேருந்து கவிழ்ந்து ஏழு யாத்ரிகர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார்.

accident

By

Published : Oct 16, 2019, 7:25 PM IST

Updated : Oct 16, 2019, 8:22 PM IST

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த யாத்ரிகர்கள் குழு மினிப் பேருந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அக்குழுவினர் தெலங்கானாவில் உள்ள முக்கிய தளங்களில் பார்வையிட்ட பின்பு ஆந்திரா சென்றுள்ளனர்.

அப்போது கோதாவரி மாவட்டம் அருகே உள்ள பள்ளத்தாக்கில் அவர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்தது. இதனையடுத்து அருகிலுள்ள கிராம மக்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் படுகாயமடைந்தவர்களை மீட்டனர். குழுவில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆறு பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுடைய உறவினர்களுக்கு ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் செல்லும் நதிநீரை நிச்சயம் தடுப்பேன்’ - பிரதமர் நரேந்திர மோடி

Last Updated : Oct 16, 2019, 8:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details