ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது. விபத்து குறித்து காவல்துறை, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அலுவலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து 2 பேர் உயிரிழப்பு! - விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்: கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
wall collapsed
விபத்தில் உயிரிழந்வர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.