இது குறித்து ஆந்திரா அரசின் கல்வித் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ’ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு, ஜில்லா பரிஷத் உள்ளிட்ட பள்ளிகளில் இனி ஆங்கில வழியில் பாடம் கற்பிக்கப்படும். இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வரும் கல்வியாண்டான 2020-21ஆம் ஆண்டிலிருந்து, ஒன்பது, பத்தாம் வகுப்புகளுக்கு 2021-22ஆம் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.
மேலும், தெலுங்கு, உருது மொழிகளையும் கட்டாய பாடமாக்கவும், ஆங்கில வழியில் பாடத்தை நடத்த ஆசிரியர்களுக்கு போதுமான பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.