தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் 600ஐ தாண்டியது கரோனா பாதிப்பு! - Coronovirus andra pradesh update

கடந்த 24 மணிநேரத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா இருப்பது உறுதியானதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 603ஆக அதிகிரத்துள்ளது.

andhra-pradesh-reports-31-new-cases-tally-at-603
andhra-pradesh-reports-31-new-cases-tally-at-603

By

Published : Apr 18, 2020, 12:31 PM IST

Updated : Apr 18, 2020, 12:43 PM IST

உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 22,51,517 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,54,278 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை இத்தொற்றால் 14, 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் சிகிச்சை பலனின்றி 480 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணா மாவட்டத்தில் 18 பேருக்கும், கர்னூல் மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், நெல்லூரில் இரண்டு பேருக்கும் இத்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 603ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இத்தொற்றால் இதுவரை 42 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் கர்னூல், குண்டூரில்தான் இதன் பாதிப்பு படு மோசமாக உள்ளது. கர்னூலில் இதுவரை 129 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குண்டூரில் இதுவரை 126 பேர் பாதிக்கப்பட்டும் நான்கு பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதையும் படிங்க:21 கடற்படை வீரர்களுக்கு கரோனா பாதிப்பு

Last Updated : Apr 18, 2020, 12:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details