தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

675 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து ஆந்திர போலீஸ் அதிரடி! - 675 கிலோ கஞ்சா பறிமுதல்

லாரியில் கடத்திச் செல்லப்பட்ட 675 கிலோ கஞ்சா பொட்டலங்களை ஆந்திரப் பிரதேச காவல் துறையினர் கைப்பற்றினர்.

cannabis
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

By

Published : Sep 17, 2020, 9:31 AM IST

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் மழைக் காரணமாக சில சாலைகளில் பயணம் தடை செய்யப்பட்டன. இந்நிலையில், கொடுபம் பாலத்தின் அருகே உள்ள சாலையில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடியை காவல் துறையினர் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு லாரி சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த லாரியில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். அதில், நன்கு பார்சல் செய்யப்பட்ட 675 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா

இதையடுத்து கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும், இந்த வாகனம் மேற்கு வங்க வாகனப் பதிவெண் கொண்டது என காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆந்திராவிலிருந்து ஒடிசாவிற்கு இந்த போதைப் பொருள்களைக் கொண்டுச் செல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்திவருவதாகவும் பார்வதிபுரம் காவல் வட்ட ஆய்வாளர் லட்சுமண ராவ் தெரிவித்தார்

இதையும் படிங்க:2 கிலோ கஞ்சா கடத்திவந்த இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details