அமராவதி (ஆந்திரா): நீதிபதிகளை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தொடர்பான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 49 பேருக்கு விளக்கம் கேட்டு ஆந்திரா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒய்.எஸ்.ஆர் கட்சியினரிடம் விளக்க கேட்டு ஆந்திர உயர் நீதிமன்றம் நோட்டீஸ்! - Andhra Pradesh HC issues notice to YSRCP leaders
நீதிபதிகளுக்கு எதிராக சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் குறித்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் என்.சுரேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அமஞ்சி கிருஷ்ணா மோகன் உட்பட 49 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
YSRCP
இதில் மக்களவை உறுப்பினர் என். சுரேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அமஞ்சி கிருஷ்ணா மோகன் ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் மட்டுமல்லாமல் ஒய்.எஸ்.ஆர் கட்சியைச் சேர்ந்த 47 பேரிடமும் உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டி கடிதம் எழுதியுள்ளது.