தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீதித்துறை மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது - ஆந்திர உயர்நீதிமன்றம்

ஹைதராபாத்: உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது சபாநாயகர், துணை முதலமைச்சர் ஆகியோர் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நீதித்துறை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது என ஆந்திரா உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆந்திர உயர்நீதிமன்றம்
ஆந்திர உயர்நீதிமன்றம்

By

Published : Oct 8, 2020, 11:40 PM IST

அண்மையில் ஆந்திரா சபாநாயகர் தம்மினேனி சீதாராம், துணை முதலமைச்சர் நாராயணசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயசாய் ரெட்டி, நந்திகிராம் சுரேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆஞ்சி கிருஷ்ணமோகன் ஆகியோர் சமூக வலைத்தளத்தில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இவ்வழக்கினை விசாரித்த நீதிபதிகள் ராகேஷ் குமார் உமாதேவி ஆகியோர் கொண்ட அமர்வு, “நீதித்துறை தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது” என வேதனை தெரிவித்தது.

மேலும், சபாநாயகர், துணை முதலமைச்சர் போன்ற பதவிகளில் இருந்து கொண்டு நீதித்துறை மீது அவர்கள் போர் தொடுக்குகிறார்களா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இப்படி இருக்கையில் இது குறித்து ஏன் வழக்கு பதிவிடவில்லை.? நீதித்துறை மீது களங்கம் விளைவிக்கும் இதுபோன்ற செயல்களை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இதுகுறித்து சிஐடி விசாரிக்க தவறினால் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும் எனவும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் முதலீடு: கனடா தொழிலதிபர்களிடையே உரையாற்றவுள்ள மோடி!

ABOUT THE AUTHOR

...view details