தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திர பெண் துணை முதலமைச்சரின் டிக்-டாக் காணொலி வைரல் - ஆந்திர பெண் துணை முதலமைச்சர் டிக்டாக் வீடியோ வைரல்

அமராவதி: டிக்-டாக்கில் தோன்றும் ஆந்திர பெண் முதலமைச்சரின் காணொலிக் காட்சிகள் வைரலாகிவருகிறது.

Andhra Pradesh Deputy CM posts TikTok video praising Jagan
Andhra Pradesh Deputy CM posts TikTok video praising Jagan

By

Published : Jan 2, 2020, 8:17 AM IST

ஆந்திராவின் பெண் துணை முதலமைச்சரான ஸ்ரீவானி தோன்றும் டிக்-டாக் காணொலிக் காட்சிகள் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அம்மாநிலத்தின் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் துணை முதலமைச்சராக இருப்பவர் ஸ்ரீவானி.

இவர் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.அண்மையில் ஜெகன் நிர்வாக ரீதியாக மாநிலத்துக்கு மூன்று தலைநகர்களை உருவாக்கப்போவதாக அறிவித்தார். ஜெகனின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவானி டிக்-டாக்கில் காணொலிக் காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தக் காணொலிக் காட்சியில் ஜெகன்மோகன் ரெட்டியின் தேர்தல் பரப்புரை (அண்ணா என்றழைக்கும் பாடல்) இடம்பெற்றுள்ளது. இந்தக் காணொலிக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகின்றன.

ஆந்திர பெண் துணை முதலமைச்சரின் டிக்-டாக் காணொலி வைரல்
சமீபத்தில் ஸ்ரீவானி தெலுங்கு திரைப்படமான 'அம்ருத பூமி' என்ற படத்தில், இயற்கை விவசாயி என்ற முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details