தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளிகள் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவதை செயலி மூலம் கண்காணிக்கும் ஆந்திரா! - ஆந்திரா கரோனா வைரஸ்

அமராவதி: பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் நாளை(நவம்பர்- 2) திறக்கவுள்ள நிலையில், கரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்த செயலி ஒன்றை தயாரித்துள்ளதாக ஆந்திரா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

orcoecoe
orcoe

By

Published : Nov 1, 2020, 1:00 PM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதியளித்தது. எனினும் இவ்விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து, பல மாநிலங்கள் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து வரும் சூழ்நிலையில், ஆந்திராவில் நவம்பர் 2ஆம்‌ தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அறிவித்தார்.

இதுகுறித்து ஆந்திரா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் கூறுகையில், " 9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வந்து பாடம் கற்கலாம். அரை நாள் மட்டுமே கல்வி நிலையங்கள் செயல்படும். வாரம் முழுவதும் ஒருநாள் விட்டு ஒருநாள் பாடங்கள் நடத்தப்படும். வகுப்பறையில் அதிகப்பட்சம் 16 மாணவர்கள் மட்டுமே இருப்பார்கள். நிலைமையை கண்காணிக்க ஆட்சியர் தலைமையில் பிரத்யேக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு அவ்வப்போது கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், " பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் கரோனா விதிமுறைகளை பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தி செயலி ஒன்றும் தயாரிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் சேர உள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நவம்பர் 16ஆம் தேதி வகுப்புகள் தொடங்குகிறது. இந்தக் 2020-2021 கல்வியாண்டை ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்

ABOUT THE AUTHOR

...view details