ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவின் பிறந்தநாளில், அவரது திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார்.
நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா: ஜெகன் மோகன் கோரிக்கை - Indian economy
அமராவதி: மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் நரசிம்மராவின் பிறந்தநாள் நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
ஜெகன் மோகன் ரெட்டி
தொடர்ந்து பேசிய அவர், “நரசிம்ம ராவ் நாட்டுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. பல்பெரும் திறமைகளுக்குச் சொந்தக்காரர் அவர். நேர்மையாக, துணிச்சலாக எதையும் அணுகக்கூடியவர்.
இந்தியா நெருக்கடியான சூழல்களைச் சந்தித்தபோது, பெரும் முயற்சிகளின் மூலம் நாட்டைக் கட்டிக்காத்தவர். எனவே அவருக்கு தேசத்தின் மதிப்புக்குரிய விருதான பாரத ரத்னா வழங்கி மத்திய அரசு சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.