தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் திருமண அழைப்பிதழிலிலும் புதுமை! - ஆந்திரா திருமண அழைப்பிதழ்

அமராவதி: திருமண அழைப்பிதழில் மணமக்களின் பெயர்களுக்குப் பதிலாக, கரோனா குறித்த விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்வு அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

invitation
invitation

By

Published : Jun 4, 2020, 9:46 PM IST

இந்தியா உள்பட அனைத்து உலக நாடுகளாலும் 2020ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பலரின் வாழ்க்கைப் பயணத்தையே கரோனா வைரஸ் முற்றிலுமாக திசைதிருப்பியுள்ளது.

வைரசைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு ஒரு பக்கம் திணறிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களும் தங்களால் முடிந்த முயற்சியாக கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

திருமண அழைப்பிதழ்

அந்த வகையில், ஆந்திராவைச் சேர்ந்த மணமக்கள், திருமண அழைப்பிதழில் தங்களின் பெயர்களை அச்சிடாமல், கரோனாவிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர். புதுவிதமான இந்தத் திருமண அழைப்பிதழ் பலரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதற்கு முன்னதாக ஆந்திராவில் முகக்கவசத்தில் திருமண அழைப்பிதழை அச்சிட்டு உறவினர்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details