திருப்பதி தேவஸ்தான அறக்கட்டளை உறுப்பினர் கே.வைத்தியநாதனுக்கு பதிலளிக்கும் வகையில் மாநில அறநிலையத்துறை புனித பூமாஷ்வானி தினமான நாளை (ஜூன்-16) ஆரோக்கிய பாரத யாகம் நடத்தப்படும் என கூறியுள்ளது.
இது தொடர்பாக மாநில அறநிலையத்துறை சிறப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பூமாஷ்வானி நாளில் (16-06-20) அஸ்வினி நட்சத்திரத்தில் வேத நூல்களின் படி, பல்வேறு பண்டைய கோயில்களில் ஆரோக்கிய பாரத யாகம் நடத்தப்படும். வேத மந்திரங்கள், உபநிடதங்கள் உள்ளிட்டவை தொற்றுநோய் மற்றும் பிற நோய்களை ஒழிக்கும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் அறிக்கையில், “கோவிட்-19 நெருக்கடி நேரத்தில் மனித குலத்துக்கு செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி இதுவாகும். நல்ல நாள்களில் நடத்தப்படும் யாகங்கள் அச்சுறுத்தலில் இருந்து மக்கள் விடுபடுவதற்கான ஒரு வழியாகும். சில பெரிய கோயில்கள் நடை பூட்டப்பட்டாலும், ஹோமங்கள் உள்ளிட்ட வழிபாட்டு பூஜைகள் தொடர்ந்து நடக்கின்றன” எனவும் கூறப்பட்டுள்ளது.