கரோனா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் 16ஆம் தேதி முதல் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பள்ளிகள் திறக்க முடியாததால், நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்களை ஆன்லைனில் நடத்தி வருகின்றனர்.
அக்டோபர் 15ஆம் தேதி கல்லூரிகள் திறப்பு - ஆந்திரா முதலமைச்சர் திட்டவட்டம!
அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக, ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும், முதற்கட்டமாக மாநிலங்களில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் துணை பேராசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதுமட்டுமின்றி கல்லூரி திறக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, உயர்கல்வித் துறை அலுவலர்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டுள்ளார். முன்னதாக அசாம் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில், தற்போது ஆந்திரா முதலமைச்சர் அறிவித்துள்ளார்.