தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜெகன் மோகன் ரெட்டியை விமர்சித்த பெண் ஊழியர் பணியிடை நீக்கம்!

அமராவதி: ஆந்திரா மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சமூக வலைதளங்களில் விமர்சித்த, கூட்டுறவு வங்கியின் ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

andhra cheif minister
andhra cheif minister

By

Published : Jun 5, 2020, 3:27 AM IST

ஆந்திராவின் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் மாதவி. இவர் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கியில் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், இவர் ஜெகன் மோகனின் கட்சி, ஆட்சி குறித்து சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்துகளை பதிவு செய்துவந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட் குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு செய்திப் பரப்பியதாக சமந்தப்பட்ட பெண் மீது குண்டூர் காவல் நிலையத்தில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார்.

விசாரணையில் அந்தப் பெண், மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கியில் பணியாற்றிவருபவர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பெயரில், வங்கியின் நிர்வாக இயக்குநர் சுப்ரமணிஸ்வர ராவ் அப்பெண்ணை பணியிடை நீக்கம் செய்தார்.

முன்னதாக, விசாகப்பட்டினம் விஷவாயுக்கசிவு தொடர்பாக மாநில அரசை விமர்சித்து கேள்வி எழுப்பிய 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரொட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்து ஒராண்டு நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details