தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை! - Andhra College students convert waste plastic into crude oil

ஹைதராபாத்: நெகிழிக் கழிவுகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து ஆந்திர மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Plastic
Plastic

By

Published : Jan 21, 2020, 3:24 PM IST

இந்த நவீன காலகட்டத்தில் மாசுவின் மறுவுருவமாக நெகிழி பார்க்கப்படுகிறது. ஆனால், அதனைச் சரியாகக் கையாண்டால், அது அதிசயமாக மாற வாய்ப்புள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடா கே.பி.என். கல்லூரியில் பயிலும் மூன்று முதுகலை மாணவர்கள் நெகிழிக் கழிவுகளை கச்சா எண்ணெய்யாக மாற்றிவருகின்றனர்.

அவர்களின் முயற்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. பி.வி.சி. நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் வெளிப்படும் நீராவிகளிலிருந்து கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றனர். 2 கிலோ நெகிழிப் பொருள்களின் மூலம் 100 கிராம் கச்சா எண்ணெய் தயாரிக்கின்றனர்.

இது குறித்து இரண்டாம் ஆண்டு முதுகலை மாணவர் சிவா, "நாங்கள் நெகிழியிலிருந்து கச்சா எண்ணெய்யை எடுக்கிறோம். சிறிய அளவு, பெரிய அளவு என இரண்டு முறைகளில் நடைபெறுகிறது. பாலிவினைல் குளோரைடு சூடாக்கும்போது, நீராவி வடிவில் கச்சா எண்ணெயை பெறுகிறோம். பின்னர், கச்சா எண்ணெய் பைரோலிசிஸ் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து பெட்ரோல் கிடைக்கிறது" என்றார்.

நெகிழி ஒழிப்பில் ஆந்திர மாணவர்கள் சாதனை

இது குறித்து வேதியியல் துறைத் தலைவர் கிருஷ்ணவேணி, "நெகிழியிலிருந்து கச்சா எண்ணெயைப் பிரித்தெடுப்பது எங்கள் திட்டமாகும். பாலிவினைல் குளோரைடு நெகிழியைப் பயன்படுத்தி, 200-400 டிகிரி சென்டிகிரேடில் பைரோலிசிஸ் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டு கச்சா எண்ணெயைப் பிரித்தெடுக்கிறோம்.

பகுதியாக வடித்தெடுத்தல் முறையை செயல்முறைப்படுத்தும்போது, கச்சா எண்ணெய் பெட்ரோல் அல்லது டீசலாக மாற்றப்படுகிறது. இதன்மூலம், பெட்ரோலை 30-40 ரூபாய்க்கு கிடைக்கிறது. பி.வி.சி. பைப்புகளிலிருந்து வெளிப்படும் நெகிழியிலிருந்து இதனை உற்பத்தி செய்கிறோம்.

பலவற்றை செயல்முறைக்கு உட்படுத்தியபோதும், பி.வி.சி. பைப்புகளிலிருந்து வெளிப்படுவது தரமாக இருந்தது" என்றார். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான டன் அளவில் நெகிழிக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. பல்வேறுவிதமான நெகிழிகள் இதில் வெளியாகின்றன.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் ஒழிப்பில் திருமலை திருப்பதி!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details