தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காமராஜர் படத்துக்கு ஆந்திர முதலமைச்சர் மரியாதை; குவியும் பாராட்டுகள்..! - தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி, அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். இதற்காக ஆந்திரா, தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில், மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.

காமராஜரைக் கொண்டாடிய ஜெகன்

By

Published : Jul 17, 2019, 8:14 AM IST

பெருந்தலைவர் காமராஜரின் 117ஆவது பிறந்த நாள் விழா, தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் போன்றவற்றிலும் காமராஜரின் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்துக்கு மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெருந்தலைவர் என தமிழர்களால் கொண்டாடப்படும் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடிய ஆந்திர முதலமைச்சருக்கு ஆந்திரா, தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் நன்றி தெரிவித்து, பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details