ஆந்திர மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை எட்டியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அம்மாநிலத்தில் நேற்று (22/05/20) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
அதில் பேசிய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, ’கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநிலத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் அடுத்த 90 நாள்களுக்குள் கரோனா பரிசோதனை செய்யக்கோரி சுகாதாரத் துறையிடம் உத்தரவிட்டார். நகரங்களில் 104 ஆம்புலன்ஸை பயன்படுத்தியும் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை நிகழ்த்த வேண்டும்’ என்றார்.