தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசா, ஆந்திரா சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடக்கம் - ஆந்திர பிரதேசம்

ஒடிசா, ஆந்திரா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

odisha, ap

By

Published : May 23, 2019, 8:48 AM IST

ஒடிசா மாநிலம்:

ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் 146 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிக்கு 1,127 வேட்பாளர்கள் பங்கேற்றனர், இதில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் அடக்கம். 8 மணிக்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. ஃபோனி புயல் பாதிப்பால் பத்குரா சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பிஜு ஜனதா தளம் , பாஜக ஆகிய இரு தரப்பையும் முக்கியமான எதிரணியாக பார்க்கின்றனர். காங்கிரஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. 8 மணிக்கு 63 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.


ஆந்திரப் பிரதேசம்:

ஆந்திரப் பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் 175 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவிக்கு 2,118 வேட்பாளர்கள் பங்கேற்றனர். ஆந்திராவில் இருந்து தெலங்கானா பிரிந்த பிறகு நடக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல் இது. எதிர்ப்பு அரசியல், ஊழல், சாதி என் பல்வேறு காரணிகள் முடிவுசெய்யப்போகும் இந்த சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிகட்டம் நெருங்கியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவுக்கும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ஆகிய இருவருக்குமிடையே இங்கு கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details