டெல்லி: சாந்தினி சௌக்கில் இருந்த பழமையான அனுமார் கோயில் இன்று (ஜனவரி 3) பொதுப்பணித்துறையால் இடிக்கப்பட்டது.
சாந்தினி சௌக்கில் பழமையான கோயில் இடிப்பு!
மறுவளர்ச்சி திட்டத்தின் கீழ் சாந்தினி சௌக்கில் இருந்த பழமையான அனுமார் கோயிலை பொதுப்பணித்துறை இடித்துள்ளது. இது தொடர்பாக அங்கு அரசியல் ரீதியான சர்ச்சை எழுந்துள்ளது.
ஷாஜகான்பாத் மறுவளர்ச்சி திட்டத்தின் கீழ் இன்று அதிகாலை 4 மணியளவில் அனுமார் கோயில் இடிக்கப்பட்டுள்ளது. இது அங்கு அரசியல் ரீதியான சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத்திடம் பேசிய அப்பகுதி கவுன்சிலர் ரவி கப்டான், மறுவளர்ச்சி திட்டம் என்ற பெயரில் டெல்லி அரசு குறிப்பிட்ட இடங்களை மட்டும் நாசம் செய்யும் வேலையை செய்துவருகிறது. சிஷ்கஞ்ச் குருதுவாராவுக்கு பாய் மடி தாஸ் சௌக்கில் அதிக இடம் ஒதுக்கியுள்ளது. இந்துக்களின் நம்பிக்கையை சீண்டும் வகையில் அனுமார் கோயிலை இடித்துள்ளது. பஞ்சாப் தேர்தல் வரப்போவதை மனதில் வைத்து அரசியல் செய்து வருகிறது. குருதுவாராவுக்கு அதிக இடம் கொடுத்தது பஞ்சாப் தேர்தலில் வாக்குகளைப் பெறதான் என்றார்.