வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவை முன்னிட்டு உத்தரகாண்டில் உள்ள ஹரி கி பவுரி கோயிலில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில், இப்பணிகளின் மத்தியில் அக்கோயிலில் நூற்றாண்டு பழமை வாய்ந்த படிக்கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கும்பமேளாவை முன்னிட்டு ஹரித்வாரில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால், கரோனா ஊரடங்கால் இப்பணிகள் தொய்வடைந்தன. இந்நிலையில், புதுப்பிக்கும் பணிகளின்போது கண்டெடுக்கப்பட்ட பழமை வாய்ந்த படிக்கட்டுகள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.