மத்தியப் பிரதேசத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வருகிறார். இதையடுத்து, உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் கூடுதல் பொறுப்பாக மத்தியப் பிரதேசத்தையும் கவனிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று (ஜூலை1) மாலை ராஜ் பவனில் மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டல், ஆனந்திபென் படேலுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.