மத்திய பிரதேசத்தின் ஆளுநராக இருந்து வந்த ஆனந்திபென் பட்டேல் உத்தர பிரதேச ஆளுநராகவும், பிகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்து வந்த லால் ஜி தண்டன் மத்திய பிரதேச ஆளுநராகவும், ஃபகு சவுகான் பிகார் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் 6 மாநில ஆளுநர்கள் மாற்றம்; மத்திய அரசு அதிரடி - Governor
டெல்லி: மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட ஆறு மாநிலங்களின் ஆளுநர்களை மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Rashtrapathi Bhavan
நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி, மேற்கு வங்கத்தின் ஆளுநராக ஜக்தீப் தண்கர், திரிபுரா ஆளுநராக ரமேஷ் பயாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, சத்தீஸ்கர், ஆந்திர ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களும் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.