16 வயதேயான ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சிறுமி கிரேட்டா தன்பெர்க். இவர் தனியொரு ஆளாக பருவநிலையைக் காக்க தொடங்கிய போராட்டம் மிகப்பெரும் எழுச்சியாக மாறியது. இதையடுத்து பருவநிலை மாற்றம் பற்றி உலகத் தலைவர்கள் மத்தியில் பேசுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை அழைத்தது. அதில் பேசிய கிரேட்டா, உலகத் தலைவர்களை தனது பேச்சால் அதிரவைத்தார். இதன்மூலம் கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரும் கிரேட்டாவிற்கு ஆதரவளித்து வருகின்றனர்.
கிரேட்டா தன்பெர்க்கிற்கு கோரிக்கைவிடுத்த ஆனந்த் மஹிந்திரா! - கிரேட்டா
டெல்லி: சுற்றுச்சூழலிலிருந்து செல்வத்தை உருவாக்குவது நல்ல லாபத்தைக் கொடுத்தாலும் அது நிலையான பொருளாதாரத்திற்கு எதிரான விளைவுகளுக்கு வித்திடும் என மஹிந்திர குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சூழலியல் போராளி கிரேட்டா உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து மஹிந்திர குழும நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "நான் நியூயார்க்கிலிருந்து கிரேட்டா போன்ற இளைஞர்களால் நம்பிக்கையுடன் நாடு திரும்புகிறேன். கிரேட்டா, உங்கள் கோபத்தை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் ஒன்றை நீங்கள் ஆதரிக்க வேண்டும். அது நிலையான ஒரு பொருளாதாரத் தன்மையால்மட்டுமே மக்களுக்கு உகந்த பொருளாதாரத்தை உருவாக்கமுடியும்" எனக் கேட்டுகொண்டுள்ளார். மேலும் கிரேட்டா தன்பெர்க் முயற்சிகளையும் பாராட்டியுள்ளார்.
இதையும் படிக்கலாமே: "உலகம் அழிவதைவிட பணம்தான் உங்களுக்கு முக்கியம்" - ஐநாவில் சீறிய சிறுமி!