மல்கன்கிரி (ஒடிசா):தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா காட்டாற்றைக் கடந்து வேலைக்குச் செல்லும் அங்கன்வாடி பணியாளார்களுக்கு ஃபைபர் படகு கொடுத்து உதவியுள்ளார்.
அங்கன்வாடி பணியாளர்களுக்கு படகு: உதவிய ஆனந்த் மஹிந்திரா - ஆனந்த் மஹிந்திரா உதவி
தொழிலதிபரும், கொடையாளருமான ஆனந்த் மஹிந்திரா ஒடிசாவைச் சேர்ந்த இரண்டு அங்கன்வாடி பணியாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளார். அவர்களுக்கு கடுமையான ஃபைபர் படகுகளை வழங்க முடிவெடுத்துள்ளார். தொழிலாளர்கள் மழைக்காலத்தில் வேலைக்குச் செல்வதற்காக பெரும் காட்டாற்றைக் கடந்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளதை ஆனந்த் மஹிந்திரா சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு அங்கன்வாடி தொழிலாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் எவ்வாறு கடுமையான காட்டாற்றைக் கடந்து வேலைக்குச் செல்கிறார்கள் என்பதை ஈடிவி பாரத் வெளிக்கொணர்ந்தது. அவர்கள் வெற்றுப் பானைகளை இடுப்பில் கட்டி, காட்டாற்றைக் கடந்த காணொலி இணையத்தில் வெகுவாக ஊடுருவியது.
இங்கு 80 மீட்டர் நீளமுள்ள பாலம் கட்டுவது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலித்துவருகிறது என்றும், ஆனால் இதற்கு சிறிது காலம் ஆகலாம் எனவும் மலை கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இச்சூழலில், இம்மக்களுக்கு உதவ, ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார். அதாவது, அங்கன்வாடி பணியாளர்கள் ஆற்றைக் கடக்க ஃபைபர் படகையும், தேவையான உபகரணங்களையும் வழங்க முன்வந்துள்ளார்.