ஒரு மின்வெளி (Cyberspace) வல்லுனராக புக்ராஜ் சிங், தன் டுவிட்டர் பக்கத்தில் கூடங்குளம் அணுமின் உற்பத்தி கூடத்தின் தகவல் முறை மின்வெளி தகவல்கள் திருடர்களால் தாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கூடங்குளம் தாக்குதல்
தேசிய மின்வெளி பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளரான லெப்டினன்ட் ஜெனரல் ராஜெஷ் பண்ட், இத்தகைய மின்வெளி தாக்குதல் செப்டம்பரில் நடந்ததாக கூறுகிறார். இச்செய்தி ஊடகங்கள் மூலம் காட்டுத்தீ போல் பரவிய உடன் அக்டோபர் மாதம் 29ஆம் நாள் அன்று காலை அது போன்ற மின்வெளி தாக்குதல் எதுவும் நடக்கவில்லை என மறுத்த கூடங்குளம் அலுவலர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் அது போன்றதொரு மின்வெளி தாக்குதல் நடந்ததை ஏற்றுக்கொண்டனர்.
கூடங்குளம் சைபர் தாக்குதல் பின்னணியில் வடகொரியா ? அதிர்ச்சி தகவல்
அக்டோபர் 30ஆம் நாள் இந்திய அனுமின் உற்பத்தி கழகம் தனது செய்திக் குறிப்பில் கூடங்குளம் அணுமின் உற்பத்தி கழக நிர்வாக வலைதளத்தில் டிடிராக் வகை பிறழ்பொருள் செப்டம்பர் மாத தொடக்கத்தில் கண்டறியப்பட்டதாக அறிவித்தது. டிடிராக் வகை பிறழ்பொருள் அதிநவீன கணினிகள் மீது மின்வெளி தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அக்கழகத்தின் தொழில்நுட்பத் துறை தாங்கள் எந்தவித மின்வெளி தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பாக உள்ளதாக அறிவித்தது.
மின்வெளி தகவல்கள் திருட்டு
தங்கள் கணினிகள் அனைத்தும் மிகவும் உயர் பாதுகாப்பு அம்சங்களான AIR-GAPPED தொழில் நுட்பத்துடன் உள்ளதாக கூறினர். மின்வெளி தாக்குதலில் இருந்து காப்பாற்ற மேற்படி கணினிகள் ISOLATED CONTROL PROCESSING TECHNOLOGY முறையின் மூலமோ அல்லது இணையதளத்தோடு இணைக்கப்படாததாலோ அல்லது பிற இணையத்தோடு இணைக்கப்படாததாலோ பாதுகாப்பாக இருப்பதாக வலியுறுத்தினர்.
ஆனால் சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டபோது ISRO இது போன்ற டிடிராக் பிறழ்பொருள் தாக்குதல் எச்சரிக்கை பெற்றதாக கூறப்படுகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் நமது அதிமுக்கியம் வாய்ந்த மின்வெளி பாதுகாப்பு முறைகளில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றன. இத்தகைய டிடிராக் மின்வெளி பிறழ்பொருட்கள் வடகொரிய மின்வெளி திருட்டு கும்பல்களினால் பயன்படுத்த படுகின்றன.
தோரியம் அணுசக்தி
இக்குழுக்கள் தகவல்களை களவாடி மேலும் மின்வெளி தாக்குதல்களை நடத்துகின்றன. இத்தகைய பிறழ்பொருட்கள் தென்கொரியாவின் பொருளாதார நடவடிக்கைகள், வங்கி மற்றும் பாதுகாப்புத் துறை தகவல்களை திருட பயன்படுத்தபடுகின்றன. பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ஏ.பரத்வாஜ் தனக்கு அது போன்ற பிறழ்பொருள் மின் அஞ்சல்கள் அனுப்பபட்டதாக கூறியிருக்கிறார்.
எஸ். ஏ. பரத்வாஜ் இந்திய அணுசக்தி கழகத்தின் தொழில்நுட்ப இயக்குனராக இருந்தவர். அவர் தோரியம் சார்ந்த அணுஉலை விஞ்ஞானியும் ஆவார். சிறிது காலமாகவே வடகொரியா யுரேனியம் சார்ந்த அணுசக்தி தொழில் நுட்பத்தில் இருந்து தன்னுடைய கவனத்தை தோரியம் சார்ந்த தொழில் நுட்பத்தை பெறுவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதிலும் தற்போது தோரியம் சார்ந்த அணுசக்தி தொழில் நுட்பத்தில் பலம் வாய்ந்த இந்தியாவை நோக்கி தனது கவனத்தை திருப்பியுள்ளது என்பது கவனிக்கப்படவேண்டியது ஆகும்.
அச்சுறுத்தும் வடகொரியா
தோரியம் சார்ந்த அணுசக்தி தொழில் நுட்பத்தில் ஆராய்ச்சி செய்யும் பிற நாட்டு விஞ்ஞானிகள் சீன அரசால் உற்று நோக்கப்படுகிறார்கள். அது போலவே இந்தியாவின் ஒருமிக முக்கிய அணுசக்தி விஞ்ஞானியான கடோட்கர் இது போன்ற மின் அஞ்சல்களை பெற்றதாக கூறியிருக்கிறார். தற்காலத்தில் இத்தகைய போர்க்களங்கள் மேலும் விரிவடைந்துள்ளன. நிலம் , நீர் , காற்று , விண்வெளி இவற்றில் நடத்தப்படும் யுத்தங்கள் மின்வெளி பாதுகாப்பு பெறவேண்டிய அளவு உயர்ந்துள்ளன என்றால் மிகையாகாது.
‘கூடங்குளம் சைபர் தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது’ - ஸ்டாலின்
மின்வெளி தாக்குதல்கள் நமது பாதுகாப்பில் உள்ள குறைபாட்டின் ஒரு முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. ஏனெனில் இவை நமது முறைகளின் செயல்பாட்டில் தடங்கள்களை ஏற்படுத்துகின்றன. மின்வெளி பாதுகாப்பு நிறுவனமான சிமாண்டெக் கின் அளவீடுபடி சுலப தாக்குதலுக்கு உள்ளாக்கூடிய மூன்று முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மின்வெளி தாக்குதல்களால்களால் பாதிக்கப்பட்ட முதல் இரண்டு நாடுகளான சீனாவும் அமெரிக்காவும் மின்வெளி பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவை விஞ்சி நிற்கின்றன.
இணையதள ஆராய்ச்சி
இவ்விரு நாடுகளும் எதிரியை பலம் இழக்க செய்யும் முன்னேற்பாடுகளை செய்துள்ளன. 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற 36 மாநிலங்களுக்கான ஆளுநர் தேர்தல் காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் நகரில் அமைந்துள்ள இணையதள ஆராய்ச்சி நிறுவனத்தின் இணையதள இணைப்பை அமெரிக்க இணைய கமாண்ட் என்ற அமைப்பின் மூலம் துண்டித்தது.
இத்தகைய செயல்பாடானது இணையதளத்தில் அமெரிக்காவின் அசைக்க முடியாத அளுமையை வெளிபடுத்துகிறது. இதன் விளைவாக 2019ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் நாள் Sovereign Internet Law நிறைவேற்றியதின் மூலம் தற்போதைய இணைய சேவையில் இருந்து பிரிந்து DNS Server உதவியுடன் தங்கள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இணைய சேவையை இயக்கும் சந்தர்ப்பத்தை ரஷ்யா பெற்றுள்ளது. விரைவில் ரஷ்யா RUNET என்ற பெயரில் தனி இணையதள சேவையை சோதனை முறையில் தொடங்க இருக்கிறது.
ஈரான் பாதிப்பு
இந்தியாவை பொறுத்தவரை ரஷ்யா போன்ற நாடுகள் தங்கள் பாதுகாப்பு முறை சாதனங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகளில் இருந்து எந்த ஒரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. நமது பாதுகாப்பு முறை சாதனங்கள் அதுபோன்ற மின்வெளி தாக்குதல்களுக்கு உட்படுவது சாத்தியம் இல்லை. ஏனெனில் நமது முக்கிய முறைகள் அனைத்தும் Air-Gap தொழில்நுட்பத்துடன் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஆனால் இத்தகைய ஏற்பாடுகள் நடைமுறைக்கு ஏற்றவை அல்ல என்பதை சரித்திரம் நிறுபித்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா தடம்புரளச்செய்தது. ஈரானின் நாண்டெஸ் யுரேனியம் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு உபகரணங்கள் வழங்கும் நான்கு நிறுவனங்களை StuxNet என்னும் எண்முறை ஆயுதங்களால் குறிவைத்தது. நாண்டெஸ் அணுசக்தி நிலையத்தில் உள்ள ஒரு கணினியுடன் இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு ஊழியரின் மூலம் Pendrive ஒன்று இணைக்கப்பட்டது.