தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிகிச்சைக்காக காத்திருந்த குரங்கு - சிலிர்க்க வைக்கும் காணொலி! - காயமடைந்த குரங்கு

பெங்களூரு: காயமடைந்த குரங்கு சிகிச்சைக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்த காணொலி காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

injured monkey
monkey waiting for treatment

By

Published : Jun 7, 2020, 2:48 PM IST

குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்பார்கள். ஆனால் பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் குரங்கிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அண்மை காலமாகவே கரோனா தனிமைப்படுத்துதல் மையத்திலிருந்து தப்பியோடிய பலரின் கதையை நாம் கேட்டிருப்போம். சிகிச்சைக்கு பயந்தவர்களால்தான் தொற்று தீவிரமாக பரவும் அபாயம் ஏற்படும்.

சிகிச்சைக்காக காத்திருந்த குரங்கு! சிலிர்க்க வைக்கும் காணொலி!

அவர்களுக்கு பாடம் புகட்டும் விதத்தில் கர்நாடக மாநிலத்தில் வாழும் குரங்கொன்றின் செயல் அமைந்திருப்பது வேடிக்கையாக உள்ளது. காயமடைந்த குரங்கு ஒன்று நேற்று (ஜூன் 06) மருத்துவமனைக்கு வந்து முதுகை தேய்த்துக் கொண்டிருந்தது, இதைக் கவனித்த மருத்துவமனை ஊழியர்கள், குரங்குக்கு சிகிச்சை அளித்துள்ளனர், சிகிச்சை நேரத்தில் குரங்கு அமைதியாக அமர்ந்து யாரையும் தொந்தரவு செய்யாமல் சிகிச்சைக்கு ஒத்துழைத்தது.

சிகிச்சைக்கு பின்னர் குரங்கு அந்த இடத்தை விட்டு வெளியேறியது, இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

இதையும் படிங்க:மலைப்பாம்பிடமிருந்து புள்ளிமானை காப்பாற்றிய போலீசார்

ABOUT THE AUTHOR

...view details