உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரஸ் தொற்றில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தற்போதுவரை இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையில், உலக சுகாதார மையம் நிறுவிய ஐரோப்பாவைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானி குழு ஒன்று இந்த வைரஸை தடுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்க கடுமையாக பாடுபட்டுவருகின்றது.
அந்த சிறப்பு ஆராய்ச்சி குழுவில் பணியாற்றிவரும் ஒரே இந்தியரான மஹேஷ் பிரசாத் என்பவர் கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரக்காலகுடு என்னும் பகுதியைச் சேர்ந்தவராவர்.
மஹேஷ், மைசூர் பல்கலைக்கழகத்தில் உயிர் வேதியியலில் முதுகலை பட்டம் பெற்ற பின்னர் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் வைராலஜி மற்றும் கீமோதெரபி பிரிவில் அறிவியல் விஞ்ஞானியாக பணியாற்றும் இவர், இந்த கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதிலும் ஐயாயிரம் பேர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்திருக்கும் நிலையில் இந்த தொற்றுக்கு மஹேஷ் மருந்து கண்டுப்பிடிக்க முற்பட்டுவருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவரின் தாய் ரத்தினமா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கனடாவிற்கு வெளிநாட்டு பயணிகள் வர தடைவிதிப்பு!