பீகார் மாநிலம் முசாபர்பூரில் சாலையில் தவறான திசையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டியை அங்கு பணியிலிருந்த காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அந்தப் வாகன ஓட்டியும் அவருடன் இருந்தவர்களும் காவலரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குற்றவாளிகளை காவலர்கள் தேடி வருகின்றனர்.
'ராங் ரூட்டில்' வந்தவரை தடுத்து நிறுத்திய காவலருக்கு அடி உதை - viral video
முசாபர்பூர்: சாலையில் தவறான பாதையில் வாகனம் ஓட்டிச் சென்றவரை தடுத்து நிறுத்திய காவலர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவலருக்கு அடி