கர்நாடகாவில் நிமிடத்திற்கு நிமிடம் அரசியல் சூழ்நிலை மாறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் அம்மாநில சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
அதிருப்தி உறுப்பினர்களை கர்நாடகாவிற்கு அழைத்து வர முயற்சி!
பெங்களூரு: மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை கர்நாடகாவிற்கு அழைத்து வர காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எம்.பி. பாட்டில்
இந்நிலையில், மும்பையில் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ள அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்களை பெங்களூருவிற்கு கொண்டு வர காங்கிரஸ் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் எம்.பி. பாட்டில், பெங்களூரு காவல் ஆணையரிடம் "அதிருப்தி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெங்களூருவிற்கு சபாநாயகரைச் சந்திக்கச் வரும்போது போக்குவரத்து இடையூறாக இருக்க கூடாது" எனத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.