கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் இளைய மருமகன் விருபக்ஷா. இவர் தார்வார் பொதுப்பணித்துறையில் நிர்வாகியாக உள்ளார். இவர், பெலகாவி வந்திருந்த முதலமைச்சர் எடியூரப்பாவை சந்திக்க காரில் வேகமாக வந்ததாக தெரிகிறது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்து காவல் அலுவலர், அவரிடம் மெதுவாக காரை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதை கேட்டு ஆத்திரமடைந்த விருபக்ஷா, காவல் அலுவலரை சரமாரியாக கெட்ட வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்ய முனைந்தனர். இந்நிலையில் அங்கு வந்த பாரதிய ஜனதாவினர் காவல் துறையினரிடம் சமாதானம் பேசி அவரை மீட்டனர்.
காவலரிடம் சீறிய கா்நாடக முதலமைச்சர் மருமகன்..! - காவலருடன் கர்நாடக முதல்வர் மருமகன் வாக்குவாதம்
பெங்களூரு: காரை அனுமதிக்காத காவலரிடம் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பாவின் மருமகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
Karnataka
Last Updated : Oct 5, 2019, 10:29 AM IST