தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கள்ளச்சாராய கும்பலால் காவலர்கள் கொலை..? சந்தேகத்தை கிளப்பும் அஸாம் விபத்து...! - Illegal Liquor

திஸ்பூர்: கோலாகட்டில் காவலர்கள் சர்ச்சைக்குரிய வகையில் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அவர்களை கள்ளச்சாராய கும்பல் குறிவைத்து தாக்கியதா என்ற கோணத்தில் காவல் துறை விசராணை செய்து வருகிறது.

கள்ளச்சாராய

By

Published : Sep 26, 2019, 8:17 PM IST

அருணாச்சல பிரதேச தேசிய நெடுஞ்சாலையான NH39ல் கள்ளச்சாராயம் அடிக்கடி கடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக கள்ளச்சாராய தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ரெய்டு செய்த காவலர்கள், அங்கேயிருந்த கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சந்தேகத்தை கிளப்பும் அஸாம் விபத்து

பின்னர் ரெய்டு முடிவடைந்ததையடுத்து, சம்பவ இடத்திலிருந்து திரும்பிய காவல் துறை வாகனம் மீது ட லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் சமூ மைபோங்சா சம்பவ இடத்திலும், கான்ஸ்டபிள் ரோமன் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சிக்கிய டம்பர் லாரி சம்பவ இடத்திலேயே தீ பிடித்து எரிந்ததில், அதன் ஓட்டுநரும் எரிந்து சாம்பலானார். இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்திலும் உள்ளூர் மக்கள் மத்தியிலும் கள்ளச்சாராய கும்பலால் காவலர்கள் உயிரிழந்தார்களா என பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னதாக ஹூச் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தையடுத்து, அஸாம் மாநிலத்தில் கள்ளச்சாரய விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details