தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஏ.என்-32 விமான விபத்து: 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு! - 13 பேரின் உடல், கருப்பு பெட்டி கண்டெடுப்பு

டெல்லி: அருணாச்சலப் பிரதேசம் அருகே மாயமான ஏ.என்-32 ரக விமானத்தில் பயணித்த 13 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

AN-32 aircraft crash: 13 bodies and black box recovered

By

Published : Jun 13, 2019, 7:32 PM IST

Updated : Jun 13, 2019, 7:45 PM IST

அஸ்ஸாம் மாநிலம் ஜோர்ஹட் விமானப்படைத் தளத்திலிருந்து இந்திய விமானப் படைக்குச் சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் ஜூன் 3ஆம் தேதி அருணாச்சலப்பிரதேசத்திற்கு புறப்பட்டுச் சென்றது. இதில் பைலட் உள்ளிட்ட எட்டு விமானப்படை வீரர்கள், ஐந்து பயணிகள் என மொத்தம் 13 பேர் பயணித்தனர்.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மெச்சுக்கா பாதுகாப்புப்படை தளத்திற்குச் செல்லும் வழியில் திடீரென மாயமான இந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்றுவந்தது. விமானம் விழுந்த பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதால் விமானத்தைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது.

இந்நிலையில், விமானம் மாயமான பத்து நாட்களுக்குப் பிறகு இன்று அருணாச்சலப் பிரதேசம் லிபோ நகரின் அருகில் உள்ள மலைப்பகுதியிலிருந்து 13 பேரின் உடல்களும், விமானத்தின் கறுப்புப் பெட்டியும் பல்வேறு சிக்கல்களுக்கு இடையே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Last Updated : Jun 13, 2019, 7:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details