புதுச்சேரி அரசு கூட்டுறவுத் துறை சார்பில் சூப்பர் மார்க்கெட்கள், பெட்ரோல் சேமிப்பு நிலையங்கள் இயங்கிவருகின்றன. இதில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்துவருகிறார்கள்.
சட்டப்பேரவை முன்பு திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட அமுதசுரபி ஊழியர்கள் - latest pudcherry news
புதுச்சேரி அமுதசுரபி ஊழியர்கள் தங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
amuthasurabi_workers_asembly_protest
இந்த அமுதசுரபியில் பணிபுரிந்துவரும் ஊழியர்களுக்கு கடந்த 10 மாதங்களாக சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனை உடனே வழங்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் முன்பு திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் காவலர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் சட்டப்பேரவை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல் துறையினர் அனைவரையும் கைதுசெய்தனர்.