தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அலிகார் முஸ்லிம் பல்கலை தேர்வுகள் நிறுத்தி வைப்பு! - குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம்

ஆக்ரா: அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

AMU postpones exams following student unrest
AMU postpones exams following student unrest

By

Published : Jan 16, 2020, 5:10 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் காவலர்கள் நடவடிக்கை என அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவ- மாணவியர் மத்தியில் எழுந்த கோப கொதிப்பு இன்னமும் அடங்கவில்லை.

இதனால் பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளையும் ஒத்திவைக்கும் முடிவு செய்யும் ஆலோசனைக் கூட்டம் துணை வேந்தர் பேராசிரியர் தாரிக் மன்சூர் தலைமையில் நடந்தது.

முன்னதாக பேராசிரியர்கள் கலந்து கொண்டு இதுதொடர்பாக ஆலோசித்தனர். புதன்கிழமை (நேற்று) நடந்த ஆலோசனையின் போது வகுப்புகள் நாளை (அதாவது இன்று) நடக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும் பல்கலைக்கழகத்தில் சலசலப்புகள் தொடர்கிறது. இதனால் தினசரி வகுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஜேஎன்யுவில் இயல்புநிலை திரும்பவில்லை - உதயநிதி ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details