தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பஞ்சாப் இளைஞரை மீட்க களத்தில் குதித்த கேப்டன் அமரிந்தர் - அம்ரிந்தர் சிங்

சண்டிகர்: மலேசிய சிறையில் இருக்கும் பஞ்சாப் இளைஞரை காப்பாற்ற வலியறுத்தி அம்மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேப்டன்

By

Published : Jul 3, 2019, 10:34 AM IST

இதுகுறித்து அமரிந்தர் சிங் எழுதிய கடிதத்தில், "கும்தி காலன் கிராமத்தில் வாழும் நாதா சிங் என்பவரது பேரனும், சரண் சிங்கின் மகனுமான ஹர்பன் சிங் மலேசியாவுக்கு 2018ஆம் ஆண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் தற்போது அந்நாட்டு காவல்துறையின் கட்டுபாட்டில் உள்ளார். ஹர்பன் சிங் சிறையில் இருக்கும் காரணம் குறித்து அவரின் உறவினர்களுக்கு தெரியவில்லை. எனவே அவரை சிறையில் இருந்து விடுவித்து இந்தியா கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

கடந்த பாஜக ஆட்சியின்போதும் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சுஷ்மா சுவராஜ், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் நலனுக்காக பல முயற்சிகளை எடுத்து சிறப்பாக செயல்பட்டு பாராட்டுகளை பெற்றார். இப்போது அந்த பொறுப்பில் உள்ள ஜெய்சங்கர் அதேபோல் செயல்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details