மக்களவைத் தேர்தலில் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் அமித்ஷா களமிறக்கப்பட்டார். இத்தொகுதியில் கடந்த 1998ஆம் ஆண்டு முதல் பாஜக மூத்தத் தலைவர் அத்வானி வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காந்திநகரை கைப்பற்றினார் பாஜகவின் ’சேனாதிபதி’ அமித்ஷா! - அமித்ஷா
காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா வெற்றி பெற்றுள்ளார்.
காந்திநகரை கைப்பற்றினார் அமித்ஷா
இதனிடையே, 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை விறுவிறுப்பாக நடந்துமுடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்துவருகிறது.
இந்நிலையில், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, காந்திநகர் தொகுதியில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 180 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.