மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய பொதுமக்களின் விருப்பம் என ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், மக்கள் தொகை கணக்கெடுப்பது சலிப்பான விஷயமல்ல, 2021க்குள் அது டிஜிட்டமயமாக்கப்படும். மொபைல் செயலி அல்லது வேறு தொழில்நுட்பம் மூலமாக மொத்த தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அப்போதுதான் மக்கள் அரசின் சலுகைகளை சரிவர பெற முடியும் என்றார்.
டிஜிட்டல்மயமாகிறது மக்கள் தொகை கணக்கெடுப்பு - அமித் ஷா - டிஜிட்டல் சென்சஸ்
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பை (census) டிஜிட்டல்மயமாக்குவதன் மூலம் நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
amit shah
மேலும் அவர், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் அரசு, நாட்டில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் தெரிவித்தார். டெல்லி மான்சிங் சாலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட அமித் ஷா இவ்வாறு பேசினார்.