மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் 24ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக கூட்டணி 162 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 104 இடங்களில் வென்ற போதிலும், தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை அக்கட்சிக்குக் கிடைக்கவில்லை. இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சிவசேனா, வெறும் 56 இடங்களை வைத்துக்கொண்டு பாஜகவிடம் ஆட்சியில் சமபங்கு கோரிவருகிறது.
இது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திரா ஃபட்னாவிஸ், "நான்தான் ஐந்து ஆண்டுகளும் முதலமைச்சராக இருக்கப்போகிறேன். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுவதுபோல் முதலமைச்சர் பதவி குறித்து அவர் அமித் ஷாவிடம் பேசவில்லை. சிவசேனா எந்த ஒரு கோரிக்கையையும் வைக்கவில்லை. இந்தக் கூட்டணித் தொடர்வதை தவிர்த்து எங்களுக்கோ, சிவசேனாவுக்கோ வேறு வழியில்லை" என்றார்.